உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒளிராத மின் விளக்குகள்

ஒளிராத மின் விளக்குகள்

உடுமலை : உடுமலை - மூணாறு ரோட்டில், தளி ரோடு ரயில்வே மேம்பாலம் மற்றும் கீழ் பாலம் உள்ளது. நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடக்கும் மேம்பாலத்திலுள்ள, பெரும்பாலான மின் விளக்குகள் எரிவதில்லை.அதே போல், குடியிருப்புகளிலுள்ள மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும், கீழ் பாலத்திலும், மின் விளக்குகள் எரியாமல், இருட்டாக காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.நடந்து செல்லும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதோடு, செயின்பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடக்கிறது.எனவே, ரயில்வே மேம்பாலம், கீழ் பாலம் பகுதியில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி