உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன்

 பராமரிப்பில்லாத ரயில்வே ஸ்டேஷன்

உடுமலை: ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதையில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் இந்த ஸ்டேஷனில் நிற்பதில்லை. போதிய பயணியர் வருகை இல்லாததால், அந்த ரயில்வே ஸ்டேஷன் சமூக விரோத செயல்கள் மையமாக மாறி வருகிறது. அங்குள்ள குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது; காலி மதுபாட்டில்கள் அப்பகுதி முழுவதும் கிடக்கிறது. கழிப்பிடமும் பயன்பாட்டில் இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ரயில்வே கோட்டத்துக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி