உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / களையாத குறைகள்; நாளை போராட்டம்

களையாத குறைகள்; நாளை போராட்டம்

அவிநாசி; அவிநாசி தாலுகா, சின்னேரிபாளையம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் உள்ள மூன்று வீதிகளில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லை. கழிவுநீர் குடியிருப்பில் தேங்குவதால், மக்களுக்கு நோய் பரவுகிறது. சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும். வீடுகளின் மேல் செல்லும் உயரழுத்த மின் கம்பியை அகற்றி வேறு பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்கரை மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சிகளுக்குட்பட்ட ஸ்ரீ ரங்கா நகர் நுழைவு பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் விபத்துகள் நேர்கின்றன. கடந்த வாரம் பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது. இதுதொடர்பாக, ஐந்தாவது வார்டு முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நாளை (15ம் தேதி) பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சின்னேரிபாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ