உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயன்பாடு இல்லாத கால்நடை மருந்தகம்

பயன்பாடு இல்லாத கால்நடை மருந்தகம்

நெருப்பெரிச்சல் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்தது. கடந்த, 2011 வரை ஊராட்சியாக இருந்த இப்பகுதி மிகவும் பின்தங்கி இருந்தது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, நீண்ட தொலைவு சென்றுவர வேண்டியிருந்தது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கையை ஏற்று, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 1998ம் ஆண்டு, கால்நடை கிளை மருந்தகம் திறக்கப்பட்டது. சிறுபூலுவபட்டியில் உள்ள கால்நடை டாக்டர்கள், வாரத்தில் மூன்று நாட்கள், கிளை மருந்தகத்தில் பணியாற்ற வேண்டுமென கூறப்பட்டது.இருப்பினும், கால்நடை மருத்துவ குழுவினரின் உதவி கிடைக்காததால், வாவிபாளையத்தில் அமைத்த கிளை மருந்தகம், பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. கடந்த 1998ம் ஆண்டு, எம்.எல்.ஏ., வாக இருந்த சுப்பராயன், இக்கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். தற்போது எம்.பி.,யாக உள்ள சுப்பராயன், கால்நடை கிளை மருந்தகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ