உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழைநீர் சேகரிப்புக்கு பயனில்லாத போர்வெல்!  திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

மழைநீர் சேகரிப்புக்கு பயனில்லாத போர்வெல்!  திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

உடுமலை;'கிராமங்களில் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட போர்வெல்களை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும்,' என கோரிக்கை எழுந்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், ஆறு உட்பட நீராதாரங்கள் இல்லாத நிலையில், குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக இருந்தது. கிராமங்களில், ஊராட்சி சார்பில், ஒன்றிய பொது நிதி உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் அமைக்கப்பட்டன.போர்வெல்களில், கோடை காலத்தில், தண்ணீரின்றி வறட்சி ஏற்படுவதும், மீண்டும் அவற்றை ஆழப்படுத்துவது, புதிய போர்வெல் அமைக்கும் பணிகள் சுழற்சி முறையில், தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது.நீண்ட கால கோரிக்கைக்கு பின், திருமூர்த்தி அணையிலிருந்து, குடிமங்கலம் ஒன்றியத்துக்கென தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம், 2017ல் செயல்படுத்தப்பட்டது.இதையடுத்து, பெரும்பாலான போர்வெல்களின் பயன்பாடு குறைந்துள்ளது. குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், முறையான பராமரிப்பு இல்லாமல் நுாற்றுக்கணக்கான போர்வெல்கள் உள்ளன.மின் இணைப்பு இல்லாதது; மோட்டார் பழுது என பல போர்வெல்கள் இயக்கப்படாமல் உள்ளன. சில கிராமங்களில் மட்டும், கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பற்றாக்குறையாக குடிநீர் வரும் போது, போர்வெல் தண்ணீரை குடியிருப்புகளுக்கு வினியோகிக்கின்றனர்.இந்நிலையில், பயன்பாடு இல்லாமல், வீணாக இருக்கும் போர்வெல்களை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சராசரியாக, 500 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில், நேரடியாக உள்ளிறக்கியும், சுற்றிலும், ஜல்லிக்கற்களை நிரப்பியும், மழை நீரை தேக்கி சேமிக்கலாம்.இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், போர்வெல் பராமரிப்பு என்ற பெயரில், அதிகளவு செலவிடப்படும், ஊராட்சி நிதியும் சேமிக்கப்படும். இதுகுறித்து, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை