உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு

ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு

திருப்பூர், : பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் நாடகப் போட்டியில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, -மாணவிகளின் நாடகம் முதலிடம் பெற்றது.இந்த நாடகம் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றது. மாநில அளவிலான போட்டி திருநெல்வேலியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் 8-ம் தேதி நடக்கிறது. மாநில போட்டியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-, மாணவிகளை பள்ளித் தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், தாளாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பினர் பெரியசாமி உள்பட அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர். இப்பள்ளி மாணவர்களின் அறிவியல் நாடகம் மாவட்ட அளவில் 9 முறை தேர்வு பெற்றுள்ளது. மாநில அளவில் கலந்து கொண்டதுடன், தென்னிந்திய அளவிலான போட்டிகளில் 3 முறை பங்கு பெற்று பெருமை சேர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை