ஐ.டி.ஐ.-ல் காலிப்பணியிடங்கள் மாணவர்களுக்கு அழைப்பு
- நமது நிருபர் - தாராபுரம் ஐ.டி.ஐ.-ல் காலியாக உள்ள பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், 2025ம் ஆண்டில், 12 தொழிற்பிரிவில் மொத்தம் உள்ள 360 இடங்களில், இதுவரை 10 தொழிற்பிரிவில் 304 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக உள்ள இரண்டு தொழிற்பிரிவுகளில் 56 இடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, வரும், 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம். 14 முதல் 40 வரை வயது வரம்பு உள்ளது. (மகளிர்க்கு வயது வரம்பு இல்லை). பயிற்சி முடிவில் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் உடனே விண்ணப்பிக்கலாம் என, ஐ.டி.ஐ. முதல்வர் அறிவித்துள்ளார்.