உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேன் பிரேக் டவுன் போக்குவரத்து பாதிப்பு

வேன் பிரேக் டவுன் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்; திருப்பூர் புஷ்பா மேம்பாலத்தில் வேன் 'பிரேக் டவுனால்' போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திருப்பூர் புஷ்பா தியேட்டரில் இருந்து டவுன்ஹாலை நோக்கி சென்ற சரக்கு வேன், திடீரென இறக்கத்தில் 'பிரேக் டவுன்'னாகி, அங்கிருந்த மையத்தடுப்பில் மோதி நின்றது.இதன் காரணமாக, டவுன்ஹாலை நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து, திருப்பூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் விரைந்து சென்று, பழுதாகி நின்ற வேனை, கிரேன் மூலமாக அப்புறப்படுத்தினர். அதன்பின், வாகனங்கள் சீராக செல்ல துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை