உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேன் கவிழ்ந்து 90,000 முட்டை நாசம்

வேன் கவிழ்ந்து 90,000 முட்டை நாசம்

பல்லடம்:நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றியபடி வேன் ஒன்று, கோவை நோக்கி நேற்று இரவு சென்றது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் - காளிவேலம்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், வேன் டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த பரமசிவம் மகன் நந்தகுமார், 36, கந்தசாமி, 32, ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பித்தனர். மேலும், வேனில் இருந்த, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 90,000 முட்டைகள் உடைந்து நாசமாகின.விபத்து குறித்து, இப்பகுதி பொதுமக்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தினர். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி