உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வந்தே பாரத் ரயில் இயங்கும்!

வந்தே பாரத் ரயில் இயங்கும்!

திருப்பூர்: பெங்களூரு - கோவை வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றமில்லை; வழக்கம் போல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு கோட்டத்துக்கு உட்பட்ட ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், பெங்களூரு - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (எண்:20641) 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓசூர் தண்டவாள பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், வரும், 4, 5 மற்றும், 6ம் தேதி அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்தில் வழக்கம் போல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயங்குமென தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ