மேலும் செய்திகள்
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
13-Aug-2025
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆம்னி வேன்கள், அதிவேகமாக விபத்து ஏற்படுத்தும் வகையில் நகரில் பறக்கின்றன. உடுமலை நகரை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. நாள்தோறும் இங்கிருந்து கிராமப்பகுதிகளுக்கும், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்குள்ள பள்ளிகளுக்கும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பான்மையான மாணவர்கள் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர். இதுதவிர, நகரப்பகுதிகளில் பஸ் வசதி குறைவான பகுதிகளில் உள்ள மாணவர்கள் ஆட்டோக்கள், ஆம்னி வேன்களில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர். இவ்வாறு மாணவர்களை ஏற்றிசெல்லும் வேன்கள், காலை நேரங்களில் மிக வேகமாக நகரில் பறக்கின்றன. இவ்வாறு வேன்கள் அதிவேகத்துடன் செல்வதால், எதிரே வருவோரும் அச்சத்துக்குள்ளாகின்றனர். வேன்களில் உள்ள மாணவர்களுக்கும் ஆபத்தான பயணமாக உள்ளது. நகரில் இவ்வாறு மாணவர்களை ஏற்றி செல்லும் ஆம்னி வேன்களை, போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்.
13-Aug-2025