உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனங்கள் ஆக்கிரமிப்பு

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை: உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் நடைமேம்பாலம் அருகில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில், பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் மக்கள் கடக்க முடியாமல், பயணியர், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, அந்த இடத்தில் நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலத்தையொட்டி, ரோட்டில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், காலை நேரங்களில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை