உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மது போதையில் வீடியோ; போலீஸ்காரரிடம் விசாரணை

மது போதையில் வீடியோ; போலீஸ்காரரிடம் விசாரணை

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் முத்துசாமி, 36 என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் மதுபோதையில் தனக்கு தானே எடுத்த வீடியோவை, 'வாட்ஸ்அப்' குழுக்களில் பகிர்ந்தார். அதில், குடும்ப பிரச்னை தொடர்பாக பேசியும், இன்ஸ்பெக்டர் ஆப்சென்ட் போட்டுள்ளதாக கூறியிருந்தார்.இதுதொடர்பாக கமிஷனர் உத்தரவின் பேரில், வீடியோ பதிவு செய்த போலீஸ்காரர் குறித்து விசாரித்தனர். அவர், விடுப்பில் இருப்பது தெரிந்தது. குடும்ப பிரச்னை இருப்பதால், அவருக்கு 'கவுன்சிலிங்' கொடுக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ