வித்யா மந்திர் மாணவி சிலம்பத்தில் சிறப்பு
திருப்பூர்; வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெற உள்ள சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளார். திருப்பூர், அவிநாசி சாலை, வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 மாணவி மந்திரா, ஜெய்வாபாய் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 55 கிலோ எடைப்பிரிவு சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் மாநில அளவில் நடைபெற உள்ள சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளார். பள்ளித் தாளாளர் ஜெயந்திமாலா, செயலாளர் விவேகானந்தன், நிர்வாக இயக்குனர் காயத்ரி விவேகானந்தன், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவரை பாராட்டினர்.