உள்ளூர் செய்திகள்

பயமில்லா பயணம்

பயமில்லா பயணம் பெண்கள் பாதுகாப்புல விஜய் இவ்ளோ கவனம் செலுத்துறது நிஜமாவே மகிழ்ச்சி தருது. இத்தனை நாள் சட்டம் ஒழுங்குதான் பெரிய பயமா இருந்துச்சு, இனி அந்த நிலைமை மாறும்னு நம்புறோம். முக்கியமா இந்த சிங்கப்பெண் படை வர்றதால, வேலைக்கு போற பெண்கள் இனி எந்த அச்சமும் இல்லாம தைரியமா போயிட்டு வருவாங்க. - டென்னிஸ் ரிச்சர்ட், தனியார் நிறுவன ஊழியர், சாமளாபுரம். கல்விக்கே முன்னுரிமை சிங்கப்பெண் படை, போதை ஒழிப்புன்னு அறிவிச்ச திட்டங்கள் எல்லாமே பெண்களுக்கு பாதுகாப்பு தரும். ஆனா, இலவசங்களை விட வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவத்துக்குத்தான் முக்கியத்துவம் தரணும். முக்கியமா டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை முறைப்படுத்தணும், சிலபஸை விட்டு வெளிய கேள்வி வராம பார்த்துக்கணும். இலவசத்துக்காக டாஸ்மாக் வருமானத்தை எதிர்பார்க்காம இருந்தாலே போதும். - சத்யா, இல்லத்தரசி, ஆண்டிபாளையம். மதுக்கடை நேரம் குறையுமா? மக்கள் வச்ச நம்பிக்கையை காப்பாத்துற மாதிரி, பதவி ஏத்துன உடனே முக்கியமான திட்டங்களை அறிவிச்சிருக்காரு முதல்வர். சிங்கப்பெண் படை, 200 யூனிட் இலவச மின்சாரம் இதெல்லாம் உடனே அமலுக்கு வர்றது சந்தோஷம். அப்படியே இந்த மதுக்கடை நேரத்தையும் குறைக்கணும்; சாயங்காலம் ஒரு ரெண்டு மணி நேரம் மட்டும் திறந்தா போதும்ங்கறது எங்களோட கோரிக்கை. - பார்த்திபன், பனியன் நிறுவன அலுவலர், சிறுபூலுவபட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை