மேலும் செய்திகள்
சீயோன் குழும பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
09-May-2025
திருப்பூர் : விஜயமங்கலம், பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவி, நேகா, 500க்கு, 496 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில், முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவி, தமிழ் - 98, ஆங்கிலம் -99, கணிதம் -99, அறிவியல் -100, சமூக அறிவியல் -100 மதிப்பெண் பெற்றுள்ளார்.இரண்டாமிடம் பெற்ற மாணவர் ரக்சன், 500க்கு, 495 மதிப்பெண்களும், மூன்றாமிடம் பிடித்த மாணவர்கள் பவிஷ் மற்றும் வர்ஷினி, தலா, 494 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளியில், 490 மதிப்பெண்களுக்கு அதிகமாக, 14 மாணவர்களும், 480க்கு அதிகமாக, 48 மாணவர்களும், 450க்கு அதிகமாக, 201 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பிளஸ் 1 தேர்வில், மாணவி தனுஷியா, தமிழ் -99, ஆங்கிலம் -99, கணிதம் -100, இயற்பியல் -100, வேதியியல் -99, கணினி அறிவியல் -100, என, 600க்கு, 597 மதிப்பெண் பெற்று, ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.மாணவி தர்சினி, 600க்கு 593 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவர் கவுதம், 600க்கு 591 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி சந்தியா, 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, பள்ளி தாளாளர் முனைவர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
09-May-2025