உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடந்து செல்ல முடியாத நிலையில் கிராம ரோடு

நடந்து செல்ல முடியாத நிலையில் கிராம ரோடு

பொங்கலுார்; பொங்கலுார் அடுத்த நாச்சிபாளையம் ஊராட்சியில் செந்தில் நகர், பகவதி அம்மன் நகர், செந்தில் ஆண்டவர் நகர் என பல்வேறு புதிய வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை வாங்கிய பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் குறுகியதாகவும், கரடுமுரடாகவும் உள்ளன. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத சூழ்நிலையில் உள்ளது. அங்கு நாள்தோறும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். அவர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.மாநகராட்சியுடன் இணைப்பதாக அறிவித்தும் நிலைமை மேம்பட வில்லை. அப்பகுதி மக்கள் ரோடு போட்டு தர வேண்டும் என்று கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி