உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம மக்கள் கோரிக்கை

கிராம மக்கள் கோரிக்கை

உடுமலை; மடத்துக்குளம் குமரலிங்கம் பேரூராட்சி, முதல் நிலை பேரூராட்சியாக நிர்வகிக்கப்படுகிறது. பேரூராட்சிக்குட்பட்ட பல குடியிருப்புகளில், இதுவரை போதுமான அளவு சாக்கடைகள் கட்டப்படவில்லை. கழிவு நீர் வெளியேற வழியில்லாமல், பல இடங்களில், தேங்கி நிற்பதால் மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். மக்கள் தொகை அடிப்படையில், கூடுதலாக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.குடியிருப்பு கழிவு நீர், பாசன ஆதாரமான ராஜவாய்க்காலில் கலக்கும் அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை