மேலும் செய்திகள்
ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
15-Dec-2024
வெள்ளகோவில்; வெள்ளகோவில் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா, 27 ம் தேதி நடக்கிறது.வெள்ளகோவில், உப்புப்பாளையம் ரோடு, எஸ்.கே.ஆர்., நிலையம் அருகே உள்ள, ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா, மஹா கணபதி ேஹாமத்துடன், 26ம் தேதி துவங்குகிறது.விநாயகர் வழிபாட்டுடன், மாலையில் முதல்கால வேள்வி பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து, 27 ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை, 5:15 மணிக்கு, ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் பரிவார சுவாமிகள் கும்பாபிேஷகமும் நடைபெற உள்ளது. காலை முதல், ஜெ.கே.கே., மஹாலில் அன்னதானம் நடைபெறுகிறது. விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள், கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
15-Dec-2024