உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாலிபால் - கால்பந்து போட்டி விறுவிறு ; குறுமைய விளையாட்டு சுறுசுறு

வாலிபால் - கால்பந்து போட்டி விறுவிறு ; குறுமைய விளையாட்டு சுறுசுறு

திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான வாலிபால் விளையாட்டு, அலகுமலை, ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாசன், செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர். குறுமைய இணை செயலர் தமிழ்வாணி முன்னிலை வகித்தார். இதில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி முதலிடம், பிரன்ட்லைன் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி முதலிடம் பெற்றது. 14 மற்றும், 17 வயது பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி அணி இரண்டாமிடம், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வேலவன் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. வடக்கு குறுமையம் திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான மாணவியருக்கான கால்பந்து போட்டி, கணியாம்பூண்டி மைக்ரோ கிட்ஸ் பள்ளி மைதானத்தில் நடந்தது. வடக்கு குறுமைய கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி தாளாளர் சங்கர், பள்ளி முதல்வர் சிவனேஸ்வரி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில், 14 வயது பிரிவில் நான்கு அணிகள் பங்கேற்றன. மைக்ரோ கிட்ஸ் அணி, ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், 4 அணிகள் பங்கேற்றன. இதில், இன்பென்ட் ஜீசஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது; மைக்ரோ கிட்ஸ் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. 19 வயது பிரிவில், மைக்ரோ கிட்ஸ் பள்ளி அணி முதலிடம், ஏ.வி.பி., டிரஸ்ட் இரண்டாமிடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை