உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

உடுமலை, ;உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளிலுள்ள அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.தேர்தல் கமிஷன், செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் ஓட்டுச்சாவடிகளை சீரமைத்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், இறந்தவர்கள், தொகுதி மாறியவர்கள் குறித்து முறையாக ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.அதிகாரிகள் தரப்பில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் போது,அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும். கோரிக்கைகள் குறித்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ