நகை திருடு போனதா? போலீசார் விசாரணை
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு கோவில் வழி, பிள்ளையார் நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார், 47. அருகிலுள்ள சாய ஆலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். குடும்பத்தினருடன், கடந்த, 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்றார். நேற்று காலை வீடு திரும்பினர். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து நல்லுார் போலீசாருக்கு, தகவல் அளித்தார். அதில், 15 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனதாக போலீசாரிடம், சுரேஷ்குமார் தெரிவித்தார். இருப்பினும், தேடிப்பார்க்குமாறு போலீசார் கூறினர். தேடியதில், நகை, பணம் இருந்தது. இருப்பினும், வீட்டில் வேறு இடத்தில் வைத்திருந்த நகை, பணம் ஏதாவது திருட்டு போனதா என்று போலீசார் விசாரிக்கின்றனர். பீடா கடையில் திருட்டு உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர் தீபக், 33. இவர் ராயபுரத்தில் பீடா கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், 80 ஆயிரம் ரூபாய் திருடு போனது. புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.