உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீணாகும் பேட்டரி வாகனங்கள்

வீணாகும் பேட்டரி வாகனங்கள்

உடுமலை; உடுமலை நகராட்சியில், துாய்மைப்பணிக்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி, பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது.உடுமலை நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துாய்மைப்பணியாளர்கள் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரித்து, மக்கும் குப்பை, நுண் உரக்குடில்கள் வாயிலாக, உரமாக மாற்றப்பட்டும், மக்காத கழிவுகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணிக்காக, 33 வார்டுகளுக்கு, 33 பேட்டரி வாகனங்கள் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பேட்டரி வாகனங்கள் பராமரிக்காமல், பழுதடைந்து வருகின்றன.இவ்வாறு, பழுதான, 15 பேட்டரி வாகனங்கள் மாட்டுத்தொழுவம் மற்றும் நகராட்சி வளாகத்தில், பல மாதமாக வீணாக நிறுத்தப்பட்டுள்ளது. மழையிலும், வெயிலிலும் காய்ந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரி வாகனங்கள் வீணாகி வருகிறது.இதனால், வீடுகள் தோறும் சென்று, குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்கள், தள்ளுவண்டிகளை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, பேட்டரி வாகனங்களை பழுது நீக்கி, முழுமையாக பயன்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை