வட்டமலைக்கரை நீர் வரத்து ஆய்வு
திருப்பூர்; திருப்பூர் பி.ஏ.பி., திட்டத்திற்கு, திருமூர்த்தி அணையில் இருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் வழியாக, உத்தமபாளையம், வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திற்கு, கடந்த, 8ம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. 18ம் தேதி வரை 10 நாட்களில், 240 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி திறந்துவிடப்பட்ட நீரை, வட்டமலைக்கரை ஓடையோர கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டு, வரவேற்றனர். நீர் திறப்பால் தடுப்பணைகள் நிரம்பியுள்ன.இதனால், 58க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்; விவசாயத்துக்கான நீர் ஆதாரம் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வட சின்னாரிபாளையம், உத்தமபாளையம், வட்டமலைக்கரை ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் நீர் வரத்தை மலர்துாவி வரவேற்றார். ஆய்வின் போது, திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் கோகுல், தாசில்தார் மோகனன் உள்ளிட்டோர் இருந்தனர்.