உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் : அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் அருகே இரு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் அருகே, பிரதான குடிநீர் குழாய் ரோட்டோரம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் குடிநீர் ஏர் வால்வு அமைக்கப்பட்டுள்ளது.அதிக அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பெரும் நுரையுடன் குடிநீர் பீறிட்டு வெளியேறி, ரோட்டில் பாய்ந்து வீணாகிறது.அதேபோல், அவிநாசி ரோட்டிலிருந்து பிரிந்து, ராமையா காலனி செல்லும் வகையில் உள்ள குறுக்கு வீதியில் ஒரு இடத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் வழங்கப்பட்டுள்ள குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வினியோக குழாயாக இது உள்ளது. குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரத்தில் இந்த உடைப்பிலிருந்து பெருமளவு குடிநீர் அங்கு ஏற்பட்டுள்ள குழியில் தேங்கியும், நிரம்பிய பின் ரோட்டிலும் சென்று பாய்ந்து வீணாகிறது.இந்த உடைப்புகள் காரணமாக குடிநீர் வீணாவதோடு, ரோடும் அரிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !