அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பு
உடுமலை: உடுமலை, அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, ஆறு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 4,686 ஏக்கர் நிலங்களுக்கு நேற்று நீர் திறக்கப்பட்டது. உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இதில், பழைய ஆயக்கட்டு பாசனம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ஆகிய ஆறு ராஜவாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட, 4,686 ஏக்கர் நிலங்களில், சம்பா பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அமராவதி அணையிலிருந்து நேற்று நீர் திறக்கப்பட்டது. வரும், 2026 பிப்.,28 வரை, 105 நாட்களில், 40 நாட்கள் நீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற சுற்றுக்கள் அடிப்படையில், 691.20 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட உள்ளதாக, நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.