உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிளை கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

கிளை கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

உடுமலை : பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் இரண்டாம் சுற்று நிறைவு பெற்று புதுப்பாளையம் கிளை கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த மண்டல பாசனத்தில், புதுப்பாளையம் கிளைக்கால்வாயில், 7,000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மக்காச்சோளம் உட்பட சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மண்டல பாசனத்தில் நான்கு சுற்றுகள் தண்ணீர் வழங்க அரசாணைகள் வெளியிடப்பட்டது. தற்போது இரண்டு சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் சுற்றில் பாசன நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு ரோந்து செல்ல வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி