இன்று குடிநீர் நிறுத்தம்
திருப்பூர் மாநகராட்சிக்கு, 3வது குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் சப்ளை பெறப்பட்டு வருகிறது. குடிநீர் திட்ட நிறுவனத்தினர் பராமரிப்பு பணி செய்ய உள்ளனர். இதனால், பெறப்படும் குடிநீர் முற்றிலும் தடை படுவதால், பகிர்மானத்தில் குடிநீர் வினியோகம் இன்று ஒரு நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், பவானி ஆற்றில் வெள்ள நீர் அதிகமாக செல்கிறது. தற்போது மழைகாலமாக உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்துள்ளார்.