உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாங்களும் கொண்டாடினோம்

நாங்களும் கொண்டாடினோம்

திருப்பூர்: திருப்பூரில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர் வசிக்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பனியன் நிறுவனங்கள், அதிக நாட்கள் விடுமுறை அளிப்பதில்லை; சொந்த ஊர் சென்று திரும்ப முடியாது என்பதால், திருப்பூரிலேயே தங்கிவிடுகின்றனர். இந்தாண்டு, ஒன்பது நாட்கள் வரை விடுமுறை என்பதால், வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் சென்றுள்ளனர். திருப்பூரில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள், உள்ளூர் மக்களின் கொண்டாட்டத்தை பார்த்து, அவர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒடிசாவை சேர்ந்த இளைஞர்கள், நேற்று பாரப்பாளையம் பகுதியில் பட்டாசு வெடித்தனர். அவர்கள் கூறுகையில், 'திருப்பூருக்கு வேலை தேடி வந்தோம்; இங்குள்ள மக்கள், அடிக்கடி பண்டிகை கொண்டாடுகின்றனர். தீபாவளியை நாங்களும் கொண்டாடுகிறோம்; குடும்பத்துடன் கொண்டாட முடியாவிட்டாலும், திருப்பூரில் பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவுக்கு சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். மதியம் மட்டன் குழப்பும் ரெடியாகிடும். திருப்பூரில் பட்டாசுக்கடையை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ