உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாராந்திர சிறப்பு பஸ்கள் இயக்கம் சற்று குறைப்பு

வாராந்திர சிறப்பு பஸ்கள் இயக்கம் சற்று குறைப்பு

திருப்பூர்,: திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வாரத்தின், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வழக்கத்தை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த வாரம், கார்த்திகை மாத பிறப்பு, மறுநாள் முகூர்த்தம் என்பதால், கோவில்வழி, புதிய மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 50 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.நடப்பு வாரம் இன்றும், நாளையும் அஷ்டமி, நவமி. அத்துடன் சுபமுகூர்த்த விசேஷ தினங்கள் இல்லை. ஆகையால், சிறப்பு பஸ் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 15 பஸ்களும், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பத்து பஸ்களும் என, 40 சிறப்பு பஸ்கள் இயங்குமென, திருப்பூர் போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !