மேலும் செய்திகள்
கருப்பு எள் கிலோ ரூ.130க்கு ஏலம்
15-May-2025
திருப்பூர், : அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், எடை மேடை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, கலெக்டரிடம் அளித்துள்ள மனு:தாராபுரம் தாலுகா, அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடம், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் கொண்டுவந்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காயவைத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர்.இங்கு எடை மேடை இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைக்குழு மூலம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எடைமேடை அமைத்துக்கொடுக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், பாதியில் நிற்கும் குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். பொருட்கள் இருப்பு வைக்கும் கிடங்குகளில், உடைந்துள்ள ஜன்னல்களை சீரமைக்கவேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
15-May-2025