மாணவர்களுக்கு வரவேற்பு
திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பூக்கள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வட்டார கல்வி அதிகாரி பூங்கொடி, பள்ளி தலைமை ஆசிரியை அருணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.