உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவியருக்கு வரவேற்பு விழா

மாணவியருக்கு வரவேற்பு விழா

உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவியருக்கு வரவேற்பு விழா நடந்தது. உடுமலை - பழநி ரோட்டில் ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் முதலாமாண்டு மாணவியருக்கு வரவேற்பு விழா நடந்தது. விழாவில் கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். நுண்கலை மன்ற மாணவ செயலாளர் பவதாரணி வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி விழாவை துவக்கி வைத்து, கல்லுாரி பருவம் குறித்து பேசினார். இளநிலை, முதுநிலை இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவியர், முதலாமாண்டு மாணவியரை வரவேற்றனர். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ரஜினி மற்றும் பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர். விழாவில், நுண்கலை மன்ற மாணவ துணைச்செயலாளர் கரிஷ்மா மானு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ