உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டு வேலை தொழிலாளருக்கு 31ம் தேதி நலவாரிய பதிவு முகாம் 

வீட்டு வேலை தொழிலாளருக்கு 31ம் தேதி நலவாரிய பதிவு முகாம் 

திருப்பூர்; வீட்டு வேலை செய்யும் தொழிலாளர், நலவாரிய உறுப்பினராக பதிவு செய்யும் முகாம், 31ம் தேதி நடக்கிறது.வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபடுவோர், தமிழ்நாடு வீட்டுப்பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம். திருப்பூர் மாவட்டத்தில், வரும், 31ம் தேதி, பெருமாநல்லுார் ரோடு, மேட்டுப்பாளையம், காமராஜர் நகர் முதல் வீதியில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூகபாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், நலவாரிய பதிவு முகாம் நடக்க உள்ளது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீட்டுவேலை செய்யும் பணியாளர்கள், வீட்டுபணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக, கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரண நிவாரணம், ஓய்வூதியம் போன்ற பயன்களை பெறலாம். நலவாரிய உறுப்பினராக பதிவு செய்யும் வகையில், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.ஒருமுறை கடவு சொல் சரிபார்ப்புக்காக, ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் போனையும் எடுத்துவர வேண்டும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை