மேலும் செய்திகள்
நீர் செறிவூட்டும் திட்டக்குழு ஆலோசனை கூட்டம்
13-Dec-2024
உடுமலை; கிராமங்களில், பயன்பாடு இல்லாமல், குப்பைத்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான பொது கிணறுகளை மீட்க, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களுக்கு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் முன், பொது கிணறுகளே முக்கிய நீராதாரமாக இருந்தன.இக்கிணறுகளை பராமரிப்பதும், சுற்றுச்சுவரை குறிப்பிட்ட இடைவெளிகளில், புதுப்பிக்கவும், ஊராட்சி, ஒன்றிய பொது நிதியில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த கிணறுகள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, முறையாக பராமரிக்கப்படவில்லை.இதனால், கிணறுகளின் தடுப்புகள் சிதிலமடைந்தது; அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பை கொட்டுவதும் அதிகரித்தது.இந்த அவலத்தால், பெரும்பாலான கிணறுகளில், தண்ணீர் மாசடைந்து, கொசு உற்பத்தி மையமாக மாறி விட்டன. சில கிணறுகள் தண்ணீரின்றி, குப்பை மேடாகி விட்டன.சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், பொது கிணறுகளை பராமரித்து மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை, செயல்படுத்த ஊராட்சி நிர்வாகங்கள் போதிய அக்கறை காட்டவில்லை.எனவே, கிராமங்களில், நுாற்றுக்கணக்கான கிணறுகள், சுவடே இல்லாமல், மறைந்து வருகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:கிராமங்களின் குடிநீர் தேவைக்காக, பொதுக்கிணறுகள் பராமரிக்கப்பட்டு வந்தன. அப்பகுதியின் முக்கிய அடையாளமாக இருந்த கிணறுகள் தற்போது, அவல நிலையில் உள்ளன.மழை நீரை, இந்த கிணறுகளில் சேகரிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தலாம். கிராமங்களில், மரக்கன்றுகளை வளர்க்க, கிணற்று நீரை பயன்படுத்தலாம். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கிராமங்களிலுள்ள கிணறுகளை கணக்கெடுத்து, அவற்றை மீட்க, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
13-Dec-2024