விசைத்தறி சிறக்க விசையூட்ட வேண்டியவை என்ன?
பல்லடம், ; ''நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க, ஜவுளித்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என, விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:சமீப காலமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. பெரும்பாலான விசைத்தறிகள் பழைய இரும்புக்குப் பயன்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து செயற்கை இழை பஞ்சு மற்றும் நுாலுக்கு மத்திய அரசு தடை விதித்ததாலும், நம் நாட்டில் மூலப்பொருட்கள் விலை அதிகம் இருப்பதாலும், மற்ற நாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உள்ளது. பின்னடைவு ஏன்?
மானியத்துடன் சோலார் மின்சாரம், நெசவாளர்களுக்கு காப்பீடு, விசைத்தறிகளை மேம்படுத்த, 50 சதவீத மானியம் ஆகியவை அடங்கிய மத்திய அரசின் 'பவர் டெக்ஸ்' இந்தியா திட்டம் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீட்டை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. விசைத்தறியை தவிர்த்து, ஜின்னிங் முதல் ஆடை வரையிலான தொழில்களுக்கான மின் கட்டண உயர்வால், ஜவுளித்துறை பின்னடைவை சந்தித்து வருகிறது. அழிவின் பிடியில்
வரும் ஆண்டு முதல் ஜவுளித்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தால், ஜவுளித் தொழில் முற்றிலும் மேம்படுவதுடன், விசைத்தறிகள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் பயனடைந்து வரும் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு, தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு, ஜூன் மாதம் துவங்கி டிச., மாதத்துக்குள் உற்பத்தியை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். துறை மாறட்டும்
அரசு பள்ளி சீருடைகள், அரசு பணியாளர்கள் சீருடைகள் ஆகியவற்றின் ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி துறையின் கீழ் விசைத்தறிகள் இருப்பதால், சலுகைகள், திட்டங்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. விசைத்தறிகளை துணிநுால் துறையில் இணைத்தால் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த துணிகளை விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய வழிவகை கிடைக்கும். இவ்வாறு, வேலுசாமி கூறினார்.கைத்தறி துறையின் கீழ் விசைத்தறிகள் இருப்பதால், சலுகைகள், திட்டங்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. விசைத்தறிகளை துணிநுால் துறையில் இணைத்தால் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த துணிகளை விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய வழிவகை கிடைக்கும்.