உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மஹாலட்சுமி எங்கே வாசம் செய்வாள்?

மஹாலட்சுமி எங்கே வாசம் செய்வாள்?

அவிநாசி : அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் சென்னை ஜெயமூர்த்தியின் கம்பராமாயணம் தொடர் சொற் பொழிவு நடைபெற்று வருகிறது. அவர் நேற்று பேசியதாவது:இறைவன் திருவடியை இறுக பற்றிக் கொண்டால் வரும் தீமைகள் விலகிச் செல்லும். தீய வழியால் கிடைக்கும் செல்வம், அற்ப ஆயுளை தரும். அதிக ஆசை என்றும் அழிவை தரும். முழுமையாக நம்பி தெய்வத்திடம் பக்தி கொண்டால் வெற்றி பெறலாம். இறைவன் சோதித்து பார்க்கிறான். எக்காலத்திலும் கைவிடமாட்டான். நம் வசிப்பிடத்தை சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் சூரிய ஒளி படும் இல்லறமாக வைத்துக் கொண்டால் அங்கே மஹாலட்சுமி கண்டிப்பாக வாசம் செய்வாள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை