வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதுல எவ்வளவு கமிஷன் வர போகுது. அதுதான்
பல்லடம்; 'வேகத்தடைகளில் வெள்ளை கோடு அடிப்பதாக கூறி, நெடுஞ்சாலை துறையினர், பெயரளவுக்கு தங்கள் கடமையை ஆற்றியுள்ளனர்,' என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகின்றனர். திருப்பூர் -- பல்லடம்- - உடுமலை நெடுஞ் சாலையில் இருந்த வேகத்தடைகள் அனைத்தும், கடந்த மாதம், முதல்வர் வருகையை முன்னிட்டு அகற்றப்பட்டன. திட்ட மிட்டபடி முதல்வர் வராத நிலையில், மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால், எண்ணற்ற விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஒரே நாளில் வேகத்தடைகளை அகற்றி, அவற்றை திருப்பி அமைப்பதில், நெடுஞ்சாலைத் துறையினர் வேகம் காட்டவில்லை என, பொதுமக்கள் குற்றம்சாட்டி இருந்தனர். விபத்துகளை தவிர்க்க, உடனடியாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என, பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், நெடுஞ்சாலைத் துறையில் கோரிக்கை மனுவும் அளித்தனர். ஏற்கனவே இருந்த இடங்களில், வேகத்தடைகள் ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட வேகத்தடைகளில், வெள்ளைக்கோடு அடிக்க வேண்டும். ஆனால், வெள்ளை கோடுக்கு பதிலாக, வெள்ளை நிற பவுடரால் பூசியுள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், 'நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வேகத்தடைகளில் முறையாக வெள்ளை பெயின்ட் அடிக்காமல், ஏதோ மாவை கரைத்து ஊற்றியது போல், நெடுஞ்சாலை துறையினர் தங்களது கடமையாற்றி உள்ளனர். இது விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அமைக்கப்பட்டு வரும் அனைத்து வேகத்தடைகளிலும், முறையாக வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும்,' என்றனர்.
அதுல எவ்வளவு கமிஷன் வர போகுது. அதுதான்