வன விலங்கு வார விழா போட்டி; வென்றவர்களுக்கு சான்றிதழ்
உடுமலை ; உடுமலையில், வன விலங்கு வார விழா போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலையில், வன உயிரின வார விழாவினை முன்னிட்டு, அக்., முதல் வாரத்தில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது.திருப்பூர் வன கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா தலைமை வகித்தார். பயிற்சி உதவி வனப் பாதுகாவலர் கீதா, உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.வன விலங்கு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, வனம், வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.