உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரியின் அருள் கிடைக்குமா?

அடிப்படை வசதிகள் செய்ய அதிகாரியின் அருள் கிடைக்குமா?

பல்லடம், ; பல்லடம் ஒன்றியம், கரைப்புதுாரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில், பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் நடந்து வருகின்றன.தொழிலாளர் அதிகம் வசிக்கும் அருள்புரத்தில், அடிப்படை வசதிகள் மிகவும் பின்தங்கி உள்ளன. தேவைக்கு ஏற்ப குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த போதும், அது சுகாதாரமானதா என்ற கேள்வி உள்ளது.ஏனெனில், பெரும்பாலான இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்வதே கிடையாது. டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி கல்லுாரி வேன்கள், பனியன் கம்பெனி வாகனங்கள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.ஆனால், முறையான ரோடு வசதி கிடையாது. முக்கிய ரோடு மற்றும் வீதிகளில், எங்கு பார்த்தாலும் கோழி, முட்டை, மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவையும் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றத்துடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. முறையற்ற சாக்கடை கால்வாய்களால், எங்கு பார்த்தாலும் கழிவுநீர் தேங்கி நிற்பதும், ரோட்டில் வழிந்து ஓடுவதுமான அவலங்களும் உள்ளன.போக்குவரத்து நிறைந்த பல்லடம் - திருப்பூர் ரோட்டில், போதிய தெருவிளக்குகள் இன்றி, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து விடுகிறது.இது, திருட்டு வழிப்பறி ஆசாமிகளுக்கு சாதகமாகவும் அமைகிறது. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அருள்புரம் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ