உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கார்த்திகை பட்ட சாகுபடி சிறக்குமா

 கார்த்திகை பட்ட சாகுபடி சிறக்குமா

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தில், இந்தாண்டு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து இன்றி காய்ந்து கிடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயராததால் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு போதிய நீர் வரத்து இல்லை. கார்த்திகை பட்டம் துவங்கியுள்ள நிலையில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்கிறது. எனவே, பல விவசாயிகள், இருக்கும் தென்னை மரங்களை காப்பாற்றினாலே போதும். இனி மேற்கொண்டு பயிர் சாகுபடி செய்வது சிரமம் என்ற மனநிலையில் இருந்தனர். இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் கார்த்திகைப் பட்ட சாகுபடி கேள்விக்குறியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு மழை பெய்யத் துவங்கி உள்ளது. இது சோர்ந்திருந்த விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது. மழை தீவிரமடையும் பட்சத்தில் கார்த்திகை பட்டத்தில் கத்தரி, மிளகாய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ