உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் நால்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகலுமா?

மங்கலம் நால்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகலுமா?

திருப்பூர்; திருப்பூர், பல்லடம், அவிநாசி, சோமனுார் நகர ரோடுகள் சந்திக்கும் மையப்பகுதியாக, மங்கலம் உள்ளது. மங்கலம் நால்ரோடு பகுதியில், குறிப்பாக, பல்லடம் ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி வரை, ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, ரோட்டை அகலப்படுத்தி, மையத்தடுப்பு ஏற்படுத்த வேண்டும். பூமலுார் பிரிவு அருகே, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை போல், மங்கலம் நால்ரோடு பகுதியிலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். போலீஸ் ஸ்டேஷனாக செயல்பட்டு வந்த, முன்னாள் ஊராட்சி அலுவலக கட்டடம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வசதியான பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைக்க வேண்டும்.அவிநாசி ரோடு பகுதியில், சாக்கடை கால்வாய் உள்ள இடம் வரை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மங்கலம் - அவிநாசி ரோடு மற்றும் திருப்பூர் ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள, மையத்தடுப்புகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அவற்றை அகற்றி தேவையான இடத்தில் மிதமான வேகத்தடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை