உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இணை இயக்குனர் பணியிடம் விவசாயிகளுக்கு பலன் தருமா?

இணை இயக்குனர் பணியிடம் விவசாயிகளுக்கு பலன் தருமா?

திருப்பூர் மாவட்டத்துக்கென இணை இயக்குனர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 13 வட்டாரங்களின் செயல்பாடுகளும் ஒரே அதிகாரியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.விளைபொருட்கள், அவற்றின் வாயிலாக தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினரின் பங்களிப்பு அவசியம்.இதுநாள் வரை, திருப்பூர் மாவட்டத்துக்கென தனியாக வேளாண் விற்பனை துறைக்கு இணை இயக்குனர் பணியிடம் இல்லை. வேளாண் அலுவலர் அந்துஸ்து பெற்ற வர்களே, பணியை கவனித்து வந்தனர்.ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக திருப்பூர் இருந்த போது தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட வட்டாரங்கள் ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டிலும், திருப்பூர், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பிற வட்டாரங்கள் கோவை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் இருந்தன; அந்த அடிப்படையில் தான், வேளாண் வணிகத்துறையின் நிர்வாகப்பணிகளும் நடந்து வந்தன.தற்போது, திருப்பூர் மாவட்டத்துக்கென இணை இயக்குனர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, 13 வட்டாரங்களின் செயல்பாடுகளும் ஒரே அதிகாரியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ