சொத்து வரி உயர்வு ரத்தாகுமா? முதல்வரிடம் எம்.பி., மனு
திருப்பூர்; திருப்பூர் எம்.பி., சுப்பராயன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கிய மனு:அந்தியூர், பவானிக்கான தோனி மடுவு திட்டம் நிறைவேற்றப்பட வேண் டும். ஆஷா பணியாளர்களுக்கு, மாதம், 20 ஆயி ரம் ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.திருப்பூர் மாநகராட்சி வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். திருப்பூர், பெரிச்சிபாளையம் காலனியில் வசித்து வரும், 124 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.காளிபாளையம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.கோபி தியாகி லட்சுமணனுக்கு மணி மண்டபம் மற்றும் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள பெருந்துறையுடன், கருமாண்டி, செல்லிபாளையம் பேரூராட்சிகளை இணைத்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.எம்.பி., கூறுகையில், 'திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை முற்றிலும் ரத்து செய்கிறோம்' என, முதல்வர் உறுதியளித்துள்ளார்,' என்றார்.