உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் வீசும் துர்நாற்றம் மாற்றம் காணுமா சூழல்?

பள்ளியில் வீசும் துர்நாற்றம் மாற்றம் காணுமா சூழல்?

அனுப்பர்பாளையம்: திருப்பூர், எம்.எஸ்., நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 45 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு தற்காலிக ஆசிரியர் என இரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் காலியாக உள்ள இடத்திலும் பள்ளி எதிரே உள்ள காலி இடத்திலும் குப்பை வண்டி, குப்பை தொட்டி, அட்டை உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ளன. துர்நாற்றத்துக்கிடையே மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், ''பள்ளியில் போதிய இட வசதி உள்ளது. குப்பை அள்ளக்கூடிய பொருட்களை அகற்றிவிட்டு, விளையாட்டு மைதானம் அமைக்கலாம். கழிப்பறையும் சுகாதாரமின்றி உள்ளது. பள்ளியை மேம்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.புதிய வகுப்பறை திறக்க தாமதம்பள்ளி வகுப்பறை பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது. மழை நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படுவதால், வகுப்பறையை பள்ளி வளாக மேடான பகுதியில் மாற்றும் வகைமில் பள்ளி மேம்பாட்டு மானியம் மூலதன உள்கட்டமைப்பு நிதி 35 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. கட்டட பணி முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளனர்.இந்த ஆண்டாவது பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என கவுன்சிலர் லதா, மண்டல கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.---எம்.எஸ்., நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்படும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடம்.திறக்கப்படாமல் உள்ள புதிய வகுப்பறை கட்டடம்.பராமரிக்கப்படாத கழிப்பறை

வாளியில் தண்ணீர் பிடித்து செல்லும் குழந்தைகள்

பள்ளமான பகுதியில் கழிப்பறை அமைந்துள்ளது. கழிப்பறைக்கு சப்பை தண்ணீர் சப்ளை செய்யும் போர்வெல் மோட்டார் பழுதாகி ஒரு வாரத்திற்கு மேலாக சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீரை வாளியில் பிடித்து குழந்தைகள் செல்கின்றனர். கழிப்பறையை சுற்றி முட்புதர் மண்டி உள்ளதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ