கால்நடை கிளை மருந்தகம் அமையுமா?
பல்லடம்; பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கலெக்டருக்கு அனுப்பிய மனு: பணிக்கம்பட்டி ஊராட்சி, வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு, கரடிவாவி கால்நடை மருந்தகத்துக்கு செல்கின்றனர். அவசர சிகிச்சைகளுக்காக கால்நடைகளை ஆட்டோவில் ஏற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதால், தேவையற்ற பொருட்செலவு, கால விரயம் ஏற்படுகிறது. வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தில், கால்நடை கிளை மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 'கால்நடைகள் அதிகம் உள்ளதால், வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தில் கால்நடை கிளை மருந்தகம் அமைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது; கால்நடைத்துறை இயக்குனருக்கு இது தொடர்பாக பரிந்துரை செய்யப்படும்' என்று கால்நடை துறை இணை இயக்குனர்கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளார்.