உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விஷத்தைக் கொடுத்து பூமியை கெடுப்பதா?

 விஷத்தைக் கொடுத்து பூமியை கெடுப்பதா?

பல்லடம்: பொங்கலூர் வேளாண் துறை மற்றும் கே.வி.கே., சார்பில், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம், பல்லடம் வனாலயத்தில் நடந்தது. வனம் அமைப்பின் துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் பாமாமணி, உதவி இயக்குனர்கள் பொம்முராஜ், சித்ரா பானு, கே.வி.கே. சார்பில் திலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேத்தனூர் இயற்கை விவசாயி பழனிசாமி பேசியதாவது: உணவு உற்பத்தி என்ற பெயரில், விஷத்தைக் கொடுத்து பூமியை கொன்று விட்டோம். இதே நிலை நீடித்தால், நாளை விவசாயம், விவசாயமாக இருக்காது. நம் குழந்தைகள் எல்லாம் என்ன செய்வார்கள். உணவும் விஷம் என்பதால், உடலும் விஷமாகிவிடும். எங்கெல்லாம் மரங்கள் அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் நல்ல மழை கிடைக்கிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கு ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது, விளைச்சலை அதிகரிப்பது என, அனைத்துக்கும் இயற்கை முறையிலான வழிமுறைகள் உள்ளன. அதைவிடுத்து, விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், நமது எதிர்கால சந்ததிகள் தான் பாதிக்கப்படும். தயவு செய்து காய்கறிகளை வெளியே வாங்கி சாப்பிடாதீர்கள். ஏனெனில், அரிசி, பருப்பை விட காய்கறியில்தான் அதிக விஷம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பூமியை மாற்றாமல் எதையுமே நம்மால் செய்ய முடியாது. நம் முன்னோர் பின்பற்றி வந்த விவசாய வழிமுறைகளை நாமும் பின்பற்றினால், நோய் இல்லாத வாழ்க்கையை வாழலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி