மேலும் செய்திகள்
நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
08-Oct-2024
உடுமலை, : நாமக்கல் மாவட்டம், மங்களாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி அமுதா, 30. சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவருக்கு, சேலம், சீலக்காம்பட்டி, காஞ்சி நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி இந்திரா, 40, அறிமுகமாகியுள்ளார்.உடுமலையிலுள்ள துணிக்கடையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அமுதா மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையை, தன் காரில் அழைத்து வந்துள்ளார். காரை அவரே ஓட்டி உள்ளார். உடுமலை அருகே, முக்கோணம் - வாளவாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அமுதாவை கீழே இறக்கி விட்டு, குழந்தையை கடத்திச் சென்றார். அமுதா புகாரில், உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திராவை கைது செய்து, குழந்தையை மீட்டனர்.போலீசார் கூறுகையில், 'விபசார தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில், அமுதாவை உடுமலைக்கு இந்திரா அழைத்து வந்துள்ளார். காரில் வரும்போது, பேசிப் பார்த்துள்ளார். அமுதா மறுத்ததால், கீழே இறக்கி விட்டு, குழந்தையை கடத்திச் சென்று, மிரட்டி ஒப்புக்கொள்ள வைக்க திட்டமிட்டுள்ளார். புகார் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்டது. இந்திராவை கைது செய்து, அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது' என்றனர்.
08-Oct-2024