உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிரைவிங் பயிற்சி பெற பெண்கள் ஆர்வம்

டிரைவிங் பயிற்சி பெற பெண்கள் ஆர்வம்

திருப்பூர்: தமிழக அரசின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், நெருப்பெரிச்சல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு, ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது; பயிற்சி பெறும், 26 பேரில், 20 பேர் பெண்கள். தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ஆங்காங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஓடை புறம்போக்கில் வசிப்போர், ஆதரவற்றவர்கள், வீடு இல்லாதவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன. குடியிருப்புகளில் பராமரிப்பு உள்ளிட்ட நிர்வகிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியாக, ஓட்டுநர் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அகஸ்டின், இளங்கோ உள்ளிட்டோர், உரிய ஆலோசனை, வழிகாட்டுதல்களை வழங்கினர்.அங்கு, 1,248 வீடுகள் உள்ளன; நிர்வாக வசதிக்காக, 3 குடியிருப்போர் நலச்சங்கங்கள் செயல்படுகின்றன. 25 நாட்கள் வழங்கப்படும் ஓட்டுநர் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யும் பொறுப்பை, குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராம்குமார், பகரூதீன், சையது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்றனர். பயிற்சியில் இணைய, 26 பேர் முன்வந்தனர்; அவர்களில், 20 பேர் பெண்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ