உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனைத்து துறைகளிலும் சாதிக்கும் பெண்கள்

அனைத்து துறைகளிலும் சாதிக்கும் பெண்கள்

திருப்பூர்; திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், கல்லுாரி பேரவை துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பொறுப்பு தமிழ்மலர் தலைமை வகித்து பேசுகையில், ''பெண்கள், எதிலும் ஏமாந்து விடக்கூடாது; சாதனை என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே மனதில் பதிந்திருக்க வேண்டும்,'' என்றார். இணை பேராசிரியர் ராஜேந்திரன், பேரவை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலெட்சுமி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''உலகளவில் பெண்கள், பல்வேறு சாதனைகளை நிகழ்த்துகின்றனர். பெண்களால் முடியாதது என எதுவுமில்லை. பெற்றோர், ஆசிரியர்களை மதிக்க வேண்டும். முதலில், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். முன்னதாக, கல்லுாரி மின்னணுவியல் துறைத் தலைவர் பொறுப்பு பாலாஜி பிரசாத், வரவேற்றார். பேரவை தலைவியாக மாணவி அஸ்வினி பிரியா, துணை தலைவராக சுமயா, பொருளாளராக காவ்யா, செயலாளராக பிரியா, கலை பிரிவு செயலராக விந்தியா, விளையாட்டு செயலராக பிரியா தர்ஷினி மற்றும் அனைத்து துறைகளின் செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவி அஸ்வினி பிரியா, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை